ADVERTISEMENT

பெரியகுளம் தொகுதிக்கு புது வேட்பாளர் அதிமுக அதிருப்தியின் எதிரொலி!!

12:28 PM Mar 19, 2019 | sakthivel.m

ஓ.பி.எஸ்.-சின் சொந்த ஊரான பெரியகுளம் தொகுதியின் இடைத்தேர்தலும் வருகிற 18ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக திமுக சார்பில் ராயப்பன்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமாரை களமிறக்கி இருக்கிறது. அதுபோல் தகுதிநீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவாளரான கதிர்காமு களமிறங்க இருக்கிறார். இந்த நிலையில் தான் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் பெரியகுளம் தென்கரை அருகே உள்ள கல்லுப்பட்டி சேர்ந்தவர். சென்னையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் சோசியல் வெல்பர் ஆபீஸராக இருக்கிறார் கட்சிக்காரர்களுக்கும் அறிமுகம் இல்லாதவர் கட்சி பொறுப்பிலும் இல்லை சாதாரண உறுப்பினராக அரசு பணியில் இருக்கும் முருகன் ஒபிஎஸ்சின் ஆதரவாளர் அதோடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிந்துரையின் பேரில் ஓபிஎஸ் சீட் கொடுத்து இருக்கிறார் என்ற பேச்சு கட்சிக்காரர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கட்சிக்காக உழைத்தவர்கள் இருந்தும் கூட தொகுதி மக்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் அறிமுகமில்லாத புதுவேட்பாளரை ஓபிஎஸ் அறிவித்ததை கண்டு தொகுதியில் உள்ள ஒட்டுமொத்த ர.ர.க்களும் அதிருப்தி அடைந்ததுடன் மட்டுமல்லாமல் தலைமைக்கும் முருகனை மாற்றக் கோரி புகார் அனுப்பினார்கள். அதன் அடிப்படையில் பெரியகுளம் தொகுதிக்கு புது வேட்பாளரை இபிஎஸ்-சும், ஓபிஎஸ்-சும் அறிவிக்க இருக்கிறார்கள் என்ற பேச்சு தொகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே துணை முதல்வரான ஓ.பி.எஸ். கொடுத்த பெரியகுளம் இடைத்தேர்தலுக்கான வேட்பாளார் பட்டியலில் சிவக்குமார் அல்லது பாப்பா இளமுருகன் இருவரில் ஒருவரை போட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் எடப்பாடியோ ஓ.பி.எஸ். கொடுத்த வேட்பாளரின் பெயரை சிபிசிஐடி மூலம் பரிசீலனை செய்த போது சிவக்குமார் கல்லுப்பட்டி நாகமுத்து தற்கொலை வழக்கில் குற்றவாளியாக இருக்கிறார். அதுபோல் பாப்பா இளமுருகனின் கணவர் இளமுருகன் கல்லுப்பட்டி பேரூராட்சி தலைவராக இருந்த போது செயல் அலுவலரையே கட்டையால் அடித்து இருக்கிறார். இப்படி இருவர் மேலேயும் புகார்கள் இருந்ததால்தான் புதிதாக கல்லுப்பட்டியைச் சேர்ந்த முருகனை எடப்பாடி தேர்வு செய்து அறிவித்தார். இப்படி ஓ.பி.எஸ். கொடுத்த பட்டியலையே ஓரம்கட்டிவிட்டு எடப்பாடி போட்ட வெளியூர் வேட்பாளர் என்பதால் ர.ர.க்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் இபிஎஸ்-சும், ஓபிஎஸ்-சும் இணைந்து பேசி இன்னும் ஒரு சில நாட்களில் புதிய வேட்பாளராக பெரியகுளம் இடைத்தேர்தல் தொகுதிக்கு அறிவிக்கஇருக்கிறார்கள்! பெரியகுளம் தொகுதிக்கு புது வேட்பாளராக பெரியகுளத்தை சேர்ந்த கொட்டகை போடும் மயில் என்பவரை தேர்வு செய்ய இருப்பதாகவும் ர.ர.க்கள் மத்தியில் பேசப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT