Skip to main content

பெரியகுளம் தொகுதிக்கு புது வேட்பாளர் அதிமுக அதிருப்தியின் எதிரொலி!!

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

ஓ.பி.எஸ்.-சின் சொந்த ஊரான பெரியகுளம் தொகுதியின் இடைத்தேர்தலும் வருகிற 18ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக திமுக சார்பில் ராயப்பன்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமாரை களமிறக்கி இருக்கிறது. அதுபோல் தகுதிநீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவாளரான கதிர்காமு களமிறங்க இருக்கிறார். இந்த நிலையில் தான் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் பெரியகுளம் தென்கரை அருகே உள்ள கல்லுப்பட்டி சேர்ந்தவர். சென்னையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் சோசியல் வெல்பர் ஆபீஸராக இருக்கிறார் கட்சிக்காரர்களுக்கும் அறிமுகம் இல்லாதவர் கட்சி பொறுப்பிலும் இல்லை சாதாரண உறுப்பினராக அரசு பணியில் இருக்கும் முருகன்  ஒபிஎஸ்சின் ஆதரவாளர் அதோடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிந்துரையின் பேரில் ஓபிஎஸ் சீட் கொடுத்து இருக்கிறார் என்ற பேச்சு கட்சிக்காரர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

 

 New candidate for Periyakulam constituency Echo of AIADMK dissatisfaction !!

 

கட்சிக்காக உழைத்தவர்கள்  இருந்தும் கூட  தொகுதி மக்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் அறிமுகமில்லாத புதுவேட்பாளரை ஓபிஎஸ் அறிவித்ததை கண்டு தொகுதியில் உள்ள ஒட்டுமொத்த ர.ர.க்களும் அதிருப்தி அடைந்ததுடன் மட்டுமல்லாமல் தலைமைக்கும் முருகனை மாற்றக் கோரி புகார் அனுப்பினார்கள்.  அதன் அடிப்படையில் பெரியகுளம் தொகுதிக்கு புது வேட்பாளரை இபிஎஸ்-சும், ஓபிஎஸ்-சும் அறிவிக்க இருக்கிறார்கள் என்ற பேச்சு தொகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே துணை முதல்வரான ஓ.பி.எஸ். கொடுத்த பெரியகுளம் இடைத்தேர்தலுக்கான வேட்பாளார் பட்டியலில் சிவக்குமார் அல்லது பாப்பா இளமுருகன் இருவரில் ஒருவரை  போட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் எடப்பாடியோ ஓ.பி.எஸ். கொடுத்த வேட்பாளரின் பெயரை சிபிசிஐடி மூலம் பரிசீலனை செய்த போது சிவக்குமார் கல்லுப்பட்டி நாகமுத்து தற்கொலை வழக்கில் குற்றவாளியாக இருக்கிறார்.  அதுபோல் பாப்பா இளமுருகனின் கணவர் இளமுருகன் கல்லுப்பட்டி பேரூராட்சி தலைவராக இருந்த போது செயல் அலுவலரையே கட்டையால் அடித்து இருக்கிறார். இப்படி இருவர் மேலேயும் புகார்கள் இருந்ததால்தான் புதிதாக கல்லுப்பட்டியைச் சேர்ந்த முருகனை எடப்பாடி தேர்வு செய்து அறிவித்தார். இப்படி ஓ.பி.எஸ். கொடுத்த பட்டியலையே ஓரம்கட்டிவிட்டு எடப்பாடி போட்ட வெளியூர் வேட்பாளர் என்பதால் ர.ர.க்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் இபிஎஸ்-சும், ஓபிஎஸ்-சும் இணைந்து பேசி இன்னும் ஒரு சில நாட்களில் புதிய வேட்பாளராக பெரியகுளம் இடைத்தேர்தல் தொகுதிக்கு அறிவிக்கஇருக்கிறார்கள்! பெரியகுளம் தொகுதிக்கு புது வேட்பாளராக பெரியகுளத்தை சேர்ந்த கொட்டகை போடும் மயில் என்பவரை தேர்வு செய்ய இருப்பதாகவும் ர.ர.க்கள் மத்தியில் பேசப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.