Advertisment

புதிய அமைச்சரவை பட்டியல்; உதயநிதிக்கு 3 ஆம் இடம்

New Cabinet List; 3rd place for Udayanidhi

Advertisment

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த உதயநிதி ஸ்டாலினைத் துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவினரும், தமிழக அமைச்சர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இத்தகைய சூழலில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதோடு, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று புதிய அமைச்சர்கள் ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றனர்.

அமைச்சர்கள் விடுவிப்பு, துறைகள் மாற்றம், புதிய அமைச்சர்களுக்கான துறைகள் என பல்வேறு அறிவிப்புகள் நேற்று தொடர் அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. வெளியான பட்டியலின்படி துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின் மூன்றாவது இடம் வழங்கப்பட்டுள்ளது. முதல் இடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் இரண்டாவது இடத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் இடம்பெற்றுள்ளனர்.

அமைச்சரவையில் நான்காவது இடத்தில் கே.என்.நேருவும், ஐந்தாவது இடத்தில் ஐ.பெரியசாமியும், ஆறாவது இடத்தில் பொன்முடியும் இடம்பெற்றுள்ளனர். ஏழாவது இடத்தில் எ.வ.வேலு அடுத்தடுத்தஇடங்களில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரிடம் பெற்றுள்ளனர். சிறையில் இருந்து ஜாமீனில் வந்து அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் செந்தில் பாலாஜிக்கு 21-வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. டி,.ஆர்.பி.ராஜாவுக்கு 33 வது இடமும், கயல்விழி செல்வராஜ் 35 வது இடமும் தரப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe