தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இன்று திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைகின்ற இடத்தினையும் அதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களின் வரைபடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஓராண்டுக்குள் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்படும்” என்று தெரிவித்தார். இந்நிகழ்வின் போது நகராட்சி நிர்வாக இயக்குநர் எஸ். பொன்னையா, மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின்குமார், இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.