new bride lost their life 10 days after her wedding

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த ஜெகன்நாதன் சென்னை ஆதம்பாக்கத்தில் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்த ஜெகநாதனுக்கு வந்தவாசியை சேர்ந்த ஷாலின் என்பவருடன் பெரியோர்கள் முன்னிலையில் கடந்த 28 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. அதன்பிறகு இருவரும் மகிழ்ச்சியாக தங்களது வந்தவாசி மற்றும் செஞ்சிக்கு விருந்திற்குச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் விருந்தினை முடித்துக்கொண்டு நேற்று சென்னை திரும்பியுள்ளனர். அதன்பிறகு ஷாலினி தனக்கு தலைவலிப்பதாக கூறியுள்ளார். அதற்காக ஜெகநாதன் மாத்திரை மற்றும் உணவினை வாங்கு கொடுத்துள்ளார். பின்னர் அதனை சாப்பிட்டுவிட்டு நன்றாக ஓய்வு எடுக்கச் சொன்ன ஜெகநாதன் ஆதம்பாக்கத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்குச் சென்றுள்ளார். அதன்பின் ஜெகநாதன் வீடு திரும்பிய போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் ஷாலினி திறக்காததால் சந்தேகமடைந்த ஜெகநாதன் வீட்டில் ஜன்னலை திறந்து பார்த்துள்ளார். அப்போது ஷாலின் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற ஜெகநாதன் ஷாலினையை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஷாலினி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஜெகநாதனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இல்லதாகவும், அதற்கு இடையூறாக தனது மகள் இருந்ததால் அவரைக் கொன்று விட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடுகின்றனர் என்று ஷாலினியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். திருமணமாகி 10 நாளில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.