Skip to main content

24 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி... 5 நாட்களுக்கு மிகக் கனமழை அறிவிப்பு!

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

WEATHER

 

தமிழ்நாட்டில் பரவலாக மழை பொழிந்துவரும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் (08.11.2021), நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர், சிவகங்கை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சேலம், கரூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து நவ. 11ஆம் தேதி தமிழ்நாடு அருகே வரும். இதனால் தமிழ்நாட்டில் வரும் 5 நாட்களுக்கு மிகக் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்