
தமிழகத்திற்கு அருகே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி ஒன்று உருவாகி உள்ளது. இதன் காரணமாக காற்றின் போக்கு மழைக்கான சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு பருவக்காற்று வலுவடைந்து இருப்பதால் கிழக்கு திசையில் இருந்து தமிழ்நாட்டுக்குள் வரக்கூடிய காற்றின் போக்கும் வலுவாக இருப்பதன் காரணமாக தமிழகத்திற்கு மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று மற்றும் நாளை, நாளை மறுநாள் ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பொழிந்து வந்த நிலையில், பரவலாக கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் நாகர்கோவில் ராமன்புதூர், செட்டிகுளம், பார்வதிபுரம் திங்கள் சந்தை, இரணியல், புலியூர்குறிச்சி, தக்கலை, அழகிய மண்டபம் ஆகிய இடங்களில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் நெல்லை மாவட்டம் வள்ளியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பொழிந்து வருகிறது.
Follow Us