Advertisment

கொநாடு வழக்கில் புதிய கைது?

New arrest in Konadu case?

கொடுநாடு கொலை கொள்ளை வழக்கில், இதுவரை விசாரிக்கப்படாமல் இருந்த சஜீவன் என்பவரை கோவையில் ஏ.டி.எஸ்.பி, கே. மூர்த்தி என்பவர் அழைத்துவந்து தனியாக பங்களாவில் வைத்து விசாரித்துவருகிறார். கொடுநாடு வழக்கில், ஜெ.வின் கார் டிரைவரான கனகராஜ்உடன் இணைந்து சதித்திட்டம் தீட்டியவர் எனச் சொல்லப்பட்ட சஜீவன், போலீஸ் விசாரணைக்கு உள்ளாகியிருக்கிறார். இவரைத் தொடர்ந்து, அதிமுகவின் முன்னாள்எம்.பியான அர்ஜூனன் என்பவரும் விசாரணைக்கு உட்படுத்த இருக்கிறார். சஜீவன், இந்த வழக்கில், கைது செய்யப்பட வாய்ப்புகள் இருக்கிறது என்கிறது கோவை மாநகர காவல்துறை வட்டாரங்கள்.

Advertisment

சசிகலாவிடம் மேற்கொண்ட விசாரணைக்கு பிறகு கோடநாடு வழக்குச் சூடு பிடித்திருக்கிறது. இந்த வழக்கில், எடப்பாடிக்கு உளவு சொல்பவர் என நக்கீரன் பல முறை சுட்டிக்காட்டிய குன்னுர் டி.எஸ்.பி. சுரேஷ் தேனிக்கு மாற்றப்பட்டுள்ளார். சுரேஷின் மனைவியும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மனைவியும் பள்ளி தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe