Advertisment

காவல்துறையில் இ-பட்டா புத்தகம் என்ற புதிய ஆப் துவக்கம்!

கடலூர் மாவட்ட காவல்துறையில் இ-பட்டா புத்தகம் என்ற புதியஆப் துவக்க விழா இன்று மஞ்சகுப்பம் SBl வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர்சரவணன் அறிமுகப்படுத்தி வைத்தார்.

Advertisment

app

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

பழைய நடைமுறையில் ஒவ்வொரு கிராமத்திலும் ,நகர் பகுதிகளில் பேங்க்,ATM, குற்றம் நடக்கும் முக்கிய பாயிண்டில் பட்டா புத்தகம் இருந்து வந்தது. ரோந்து செல்லும் காவலர்கள், தணிக்கை செய்யும் அதிகாரிகள் அந்த பீட்புக்கில் கையொப்பம் செய்தும், அந்த பகுதியில் உள்ளவர்களிடம் ரோந்து செல்லும் காவலர்கள் பீட் டிக்கெட்டில் கையெப்பம் பெற்று ரோந்து பணி மேற்கொள்வார்கள்.

கடலூர் மாவட்ட. காவல் கண்காணிப்பாளர் சரவணனின் புதிய முயற்சியால் Hexcon Info Tech நிறுவத்தின் உதவியுடன் இந்த புதிய ஆப் மூலம் ரோந்து செல்லும் காவலர்கள் பீட் பாயிண்டில் கணினி மூலம் QR கோடு அடங்கிய பதிவு அட்டை பொருத்தப்பட்டு உள்ளது. ரோந்து காவலர்கள் தனது ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் ஸ்கேன் செய்தால் அவருடைய விவரம், நேரம், அதற்கான தூரம் ஆகியவை பதிவு செய்யப்பட்டுவிடும்.

app

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்த பதிவு விவரங்கள் உடனடியாக காவல் நிலையத்தில் உள்ள கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். மேலும் உயர் அதிகாரிகளின் மொபைல் போனுக்கு இந்த அறிக்கை உடனே பதிவு செய்யப்படும்.

ரோந்து காவலர் எந்த நேரத்தில், எந்த இடத்தில் ரோந்து பணி செய்து கொண்டிருக்கிறார் என்பதை தனது மொபைல் மூலமே உயர் அதிகாரிகள் கண்காணிக்க முடியும். கடலூர் புதுநகர், திருப்பாதிரிபுலியூர் காவல் நிலைய எல்லைகளில் 140 முக்கிய இடங்களில் QR Board அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் சரவணன், சரண்ராஜ் ( Hexcon info Tech ) மற்றும் ரோந்து காவலர்கள் பங்கேற்றனர்.

mobile app police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe