Advertisment

சிதம்பரம்-சென்னை புதிய குளிர்சாதன பேருந்து இயக்கம்...

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு 2 குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படும் நிகழ்ச்சி சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமை வகித்தார்.தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத் மற்றும் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

Advertisment

new air conditioned buses for chennai from chidambaram

நிகழ்ச்சியில் சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜன், டிஎஸ்பி கார்த்திகேயன், சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா,அரசு போக்குவரத்து கழக மேலாளர் வெங்கடேசன், துணைமேலாளர்கள் சேகர்ராஜ்,முருகானந்தம், சுந்தரம் வணிக மேலாளர் பரிமளம், கிளை மேலாளர்கள் புவனேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த பேருந்து சிதம்பரத்தில் தினமும் காலை 6. 10 மணிக்கும், மதியம் 2 மணிக்கும், இரவு 10.30 மணிக்கும் சென்னை செல்கிறது.பயணகட்டனம் ரூ 270 , சாதரன அரசு பேருந்தில் ரூ 230, 240 கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
service bus Chennai Chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe