Skip to main content

“பள்ளிக் கல்வித்துறையில் புதிய சாதனை” - தமிழக அரசு பெருமிதம்!

Published on 21/05/2024 | Edited on 21/05/2024
A new achievement in school education" - TN govt is proud

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ரூ.1887 கோடியில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பள்ளிக் கல்வித்துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தலை சிறந்து விளங்குகிறது எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் தொடக்கப் பள்ளிகளில் ரூ.600 கோடியில் காலை உணவுத் திட்டம், ரூ.436 கோடியில் திறன்மிகு வகுப்பறைகள், ரூ.590 கோடியில் இல்லம்தேடி கல்வித் திட்டம் மற்றும் ரூ.101 கோடியில் ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “மனிதனை மனிதனாக உயர்த்துவது கல்வி. மனித சமுதாயத்தை மாற்றி அமைக்கும் வலிமையான கருவி கல்வி என்று  கூறுவர். அந்தக் கல்வி, வெள்ளத்தால் அழியாது; வெந்தணலில் இட்டாலும் வேகாது; கள்வரால் கொள்ளையடிக்கவும் இயலாது: பிறர்க்குக் கொடுத்தாலும் குறையாது; எனக் கல்விச் செல்வத்தின் பெருமையை விவேக சிந்தாமணி பாடல் கூறும். எனவேதான், கல்வி வளர்ச்சிக்கு எல்லோரும் தொண்டு செய்கிறார்கள்.

A new achievement in school education" - TN govt is proud

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான உயர்ந்த கல்வி பெறவேண்டும் எனப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறார். கல்வி வளர்ச்சியில் தொடக்கக் கல்வி மிகமிக முக்கியமானது. அது ஒரு மாளிகைக்கு அடித்தளம் போன்றது. அந்த அடித்தளம் வலுவாக இருந்தால்தான் அதன் மீது எழும்பும் கட்டடம் மிகவும் வலுவாக அமையும். அதுபோலத்தான் கல்வியின் ஆரம்பம் - தொடக்கம் சரியாக அமைந்து விட்டால் தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை அதுவே குழந்தைகளிடம் ஏற்படுத்திவிடும்.

இந்தச் சிந்தனையின் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வியின் வளர்ச்சியில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி புதிய புதிய திட்டங்களைத் தந்து குழந்தைகள் பள்ளிக்கு தொடர்ந்து வந்து கற்கும் சூழ்நிலையை மேம்படுத்தி வருகிறார். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ள திட்டங்கள் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. குழந்தைகளும் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர்.

A new achievement in school education" - TN govt is proud

இதற்குத் துணை புரியும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வித் திட்டம், வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், நுழை-நட-ஓடு-பற-திட்டம், காடு மற்றும் மலைப்பகுதி குழந்தைகளுக்காகச் சிறப்பு வசதி, தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள், இடைநிலை ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள், மாற்றுத் திறன் மாணவர்களுக்குத் தனி கவனம், நற்பண்புகளை வளர்க்கும் கதை நூல்கள், பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், ஆசிரியர்கள் நியமனம், ஆசிரியர்களுக்கு அண்ணா தலைமைத்துவ விருது எனப் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றனர்.

இப்படிப் பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதன் பயனாக அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எனவேதான். கல்வித்துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் சிறந்து விளங்குகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைவராலும் பாராட்டப்படுகிறார். இது பள்ளிக் கல்வித்துறையில் ஒரு புதிய சாதனையாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்