Skip to main content

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளுக்காக புதிய 700 இருக்கைகள்..! 

Published on 30/04/2021 | Edited on 30/04/2021
New 700 seats for passengers at Trichy Airport

 

திருச்சி சர்வதேச விமான நிலையம் 950 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இருக்கும் அளவை விட இன்னும் பல மடங்கு இடத்தை அரசிடம் இருந்து பெற்று, சர்வதேச அளவிலான தரம் உயா்த்தப்பட்ட விமான நிலையமாக மாறி வரும் திருச்சி விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. 

 

இந்நிலையில் பல்லாயிரகணக்காண ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டு, தற்போது இருக்கும் விமான நிலைய கட்டிடங்களை தொடர்ந்து புதிய சர்வதேச விமான சேவை முனையம் மேம்படுத்தபட்டு வருவகிறது. முதல்கட்ட பணியாக விமான ஓடுதளங்கள் போடும் பணி நடைபெற்று வருகிறது. சிங்கப்பூா், மலேசியா, கோலாலம்பூா், துபாய், மஸ்கட், உள்ளிட்ட பல் வேறு நாடுகளுக்கும், டெல்லி, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தொடர் விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சுமார் 700 புதிய இருக்கைகள் வாங்கப்பட்டு அதை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போலி பாஸ்போர்ட்; விமான நிலையத்தில் வைத்து காப்பு போட்ட காவல்துறை

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Returnee arrested on fake passport at Trichy airport

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இம்மிகிரேஷன் அதிகாரி சுஜிபன் தலைமையிலான அதிகாரிகள் பயணிகளை சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிகளை அவர்கள் சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது தஞ்சாவூர்  ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (39) என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் போலியான அரசு முத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரைப் பிடித்து ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் ஆனந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story

நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

trichy international airport singapore cargo flight gold issue

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் வந்து சேர்ந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

 

அதில் ஒரு ஆண் பயணியை சோதனை செய்தபோது அவர் கொண்டு வந்த உடைமையில் கார் ஆடியோ சிஸ்டமில் மறைத்துக் கொண்டு வரப்பட்ட 10 தகடு வடிவிலான 480 கிராம் தங்கத்தையும், அதேபோல் அவர் கைப்பையில் கொண்டு வந்த 180 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

மேலும் அந்தப் பயணியிடம் இருந்து மொத்தம் 638 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு 38 லட்சத்து 73 ஆயிரத்து 936 ரூபாய் என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டது. இந்த சம்பவதால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.