nn

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. நேற்று பாமக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் சௌமியா அன்புமணி மற்றும் பாமகவினர் பலர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

Advertisment

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவதைப் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. ஒரே ஒரு கூற்றுதான் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு தேவையான நிவாரணத்தை, குற்றம் செய்தவர்கள் மீது எடுக்கப்படும் குற்ற நடவடிக்கை வாயிலாக தண்டனை பெற்று தருவதில் இந்த ஆட்சி எள்ளளவும் பின்வாங்கவில்லை. அப்படி இருந்தும் தொடர்ந்து இந்த பிரச்சனையைக் கையாள்கிறார்கள் என்றால் பாதிக்கப்பட்டது ஒரு பெண்.

Advertisment

அந்த பெண்ணுடைய வருங்காலத்தை நினைக்காதவர்கள் தான் இப்படி இந்த பிரச்சனையை ஊதி ஊதி பெரிதாக்குகிறார்கள். நாமும் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தான். நமக்கும் பெண் குழந்தைகள் இருக்கும் அல்லது நம்மைச் சார்ந்த உறவினர்களுக்கும் பெண் குழந்தைகள் இருக்கலாம். தொடர்ந்து இப்படி ஒரு இழிச் சொற்களை பயன்படுத்தி அந்த பெண்ணினுடைய வருங்காலத்தை குலைத்து செய்கின்ற இவர்களை நிச்சயமாக வருங்காலம் ஏற்றுக்கொள்ளாது. மனிதாபிமானம் உள்ள மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஜாமீனில் வெளிவராத அளவிற்கு பல்வேறு கடுமையான பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே நிச்சயம் தமிழகத்தை பொறுத்தவரை தமிழக மக்களைப் பொறுத்தவரை நீதி தவறாத, பெண்களுக்கு முழு பாதுகாப்பு உள்ள ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது. நீதிமன்றம் கடுமையாக கண்டித்து இருக்கிறது. இதற்கு பிறகாவது இவர்கள் தங்களுடைய போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் இப்படிப்பட்ட அவதூறை கிளப்புபவர்களுக்கு 2026 ஆம் ஆண்டு காத்துக் கொண்டிருக்கிறது. தகுந்த பதிலடி மக்கள் நிச்சயம் வழங்குவார்கள்'' என்றார்.

Advertisment