edapadi

Advertisment

ஜெயலலிதாவின் 70-வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 86 ஏழை ஜோடிகளுக்கு கோவை தொண்டாமுத்தூரில் இன்று திருமணம் நடந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அதிமுக ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்ற திமுகவின் கனவு நிறைவேறாது. தி.மு.க மாநடடில் பேசிய மு.க ஸ்டாலின் ஒரு சொடக்கு போட்டால் அ.தி.மு.க ஆட்சி கவிழ்ந்து விடும் என பேசி உள்ளார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் கடப்பாரை கொண்டு நெம்பினாலும் அதிமுக ஆட்சியை எதுவும் செய்ய முடியாது என முதல்வர் பேசினார். அதிகாரத்தை விரும்பும் அளவுக்கு மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறையில்லை. இவ்வாறு பேசினார்.