Advertisment

அமெரிக்க நரம்பியல் அகாதெமியின் உறுப்பினராக திருச்சியைச் சேர்ந்தவர் தேர்வு

Neuroscientist M.A. Aleem elected as a Fellow of the American Academy of Neurology

அமெரிக்க நரம்பியல் அகாதெமியின் உறுப்பினராக திருச்சியைச் சோந்த நரம்பியல் மருத்துவ சிகிச்சை நிபுணா் எம்.ஏ.அலீம் தேர்வாகியுள்ளாா். தமிழகத்தின் மத்திய மற்றும் தெற்கு மண்டலத்துக்கான 2024 ஆம் ஆண்டுக்கான உறுப்பினராகத் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியின் நரம்பியல் துறை தலைவராகவும், துணை முதல்வராகவும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிர்வாகப் பொறுப்பையும் வகித்தவர்.

Advertisment

மூளை நரம்பியல் மருத்துவத் துறையில் இவரது பங்களிப்பை கெளரவிக்கும் வகையில், சிறப்புமிக்க அமெரிக்க நரம்பியல் அகாதெமியின் 2024-ஆம் ஆண்டுக்கு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளாா். இவா், தற்போது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும், திருச்சி ஏபிசி மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவ சிகிச்சைப் பிரிவு நிபுணராகவும், ஆலோசகராகவும் உள்ளார்.

Advertisment

இவா், ஏற்கெனவே இந்திய நரம்பியல் அகாதெமி உறுப்பினராகவும், இந்திய மருத்துவர்கள் கல்லூரி, கிளாஸ்கோ மருத்துவர்கள் ராயல் கல்லூரியின் உறுப்பினராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Doctor trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe