netaji

Advertisment

இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியின் புகைப்படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிட வேண்டுமென்ற குரல்கள் நீண்ட நாட்களாகவே எழுந்து வருகின்றன. இந்த நிலையில் நேதாஜியின் புகைப்படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தேசிய உணர்வை உருவாக்கியதில் நேதாஜியின் பங்கு ஈடு இணையற்றது. அவரது தியாகத்தையும், போராடியவர்களின் தியாகத்தையும் யாரும் புறக்கணித்துவிட முடியாது. வரும் தலைமுறையினர் நியாபகம் வைத்துக்கொள்ளும் வகையில் நமது தேசத்தின் வரலாறு மீண்டும், மீண்டும் சொல்லப்பட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

மேலும் நீதித்துறை தடைகள் காரணமாக, தங்களால் மனுதாரரின் கோரிக்கையை அமல்படுத்தும் உத்தரவைப் பிறப்பிக்க முடியாதென கூறிய நீதிபதிகள், இதுகுறித்து பரிசீலித்து முடிவெடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.