Advertisment

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

Nepal earthquake lost life toll rises to 128

நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

நேபாளத்தில் வடமேற்குப்பகுதியில் நேற்று இரவு இந்திய நேரப்படி 11.52 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 ஆகப் பதிவாகி இருந்தது. இதனால், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கம் வட இந்தியாவில் சில மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 128 பேர் உயிரிழந்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும்கூடும் எனச் சொல்லப்படுகிறது.

people earthquake Nepal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe