n

நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

எஸ்.டி.பி.ஐ. கட்சி கடந்த மாதம் 29ம் தேதி மேலப்பாளையத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்திய பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக அமைச்சர்களையும் அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு,சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர் தினமும் காலையும், மாலையும் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

Advertisment

கைது செய்யப்படுவதற்கு முன்பே நெல்லைக்கண்னன் இதய பிரச்சனையினால் மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்துவந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் நெஞ்சுவலி, மூச்சித்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.