நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. கொலை வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nellai1_4.jpg)
நெல்லை ரெட்டியாப்பட்டியில் முன்னாள் மேயர் உட்பட மூவர் கொலையானது சம்பந்தமாக முக்கிய நபரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 23ந் தேதி நெல்லை ரெட்டியாப்பட்டியில் பட்டப்பகலில் நெல்லையின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் வேலைக்காரப் பெண் மாரியம்மாள் உட்பட மூவர் கொடூரமாக கொல்லப்பட்டனர். கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடந்து வரும் நிலையில் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
Follow Us