nellai, thoothukudi police sp transfer cancel tn govt order

Advertisment

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக மணிவண்ணன், பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 13- வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆக ஜெயக்குமார், நெல்லை மாவட்ட எஸ்.பி.யாக கிருஷ்ணராஜ் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த உத்தரவை தமிழக அரசு ரத்துசெய்துள்ளது.

தமிழக அரசின் புதியஉத்தரவில், 'நெல்லை மாவட்ட எஸ்.பி.யாக மணிவண்ணன், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக ஜெயக்குமார் பணியில் தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. மாதவரம் காவல்துறை துணை ஆணையராக கிருஷ்ணராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கிழக்கு மண்டலப் போக்குவரத்துக் காவல் துணை ஆணையராக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 13- வது பட்டாலியன் கமாண்டன்ட ஆகசெந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.