தொடர்மழை ; நெல்லை, தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

Nellai, tenkasi district schools have holiday due to rain

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் சென்னையில் சில இடங்களில் வெள்ள நீர் வடியாமல் இன்னும் தேங்கியுள்ளதாலும், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாலும் சென்னையில் உள்ள பள்ளிகளுக்குத் தமிழக அரசு சார்பில் இன்றும் (09.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சி.பி.எஸ்.இ என அனைத்து பள்ளிகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு எதிரொலியாக 6வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகச் சென்னையில் கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நெல்லை மற்றும் தென்காசியில்கனமழை பெய்து வருவதால், இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும் சிறப்பு வகுப்புகள் உட்பட அனைத்து வகுப்புகளும் ரத்து எனவும் அறிவித்துள்ளனர்.

nellai rain
இதையும் படியுங்கள்
Subscribe