Advertisment

சங்கரன்கோவிலில் தீ விபத்து! 

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆடி தபசு திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். அதனை தொடர்ந்து இந்த விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அது தொடர்பான செய்தியினை, ஏற்கனவே நக்கீரன் இணையதளம் வெளியிட்டு இருந்தது. இதனிடையே நாளைய தினம் நடக்கவிருக்கும் நான்காவது நாள் மண்டகப்படி, திருவிழாவின் பொருட்டு அலங்கார மின் விளக்குகளுடன் கூடிய மிகப்பெரிய பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மாலை 06.00 மணியளவில், பந்தலில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது.

Advertisment

nellai sankaran koil incident peoples safe

தீ அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுக்க உடனடியாக அருகில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டனர். மேலும் தீ விபத்து நடந்த பகுதிகளில் யாரும் இல்லாததால், பொது மக்கள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார். அதனை அடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாஎன்பது குறித்து சங்கரன்கோவில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment
incident Nellai District peoples safe sankarankovil Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe