நெல்லை கல்குவாரி விபத்து... உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு!

 Nellai quarry accident ... Relief notice to the families of the victims!

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் கல்குவாரியில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுமார் 300 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட ஆறு தொழிலாளர்களில் விஜய், முருகன் என்ற இரண்டு தொழிலாளர்கள் மட்டும் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மூன்றாவதாக மீட்கப்பட்ட செல்வம் என்ற நபர் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் நான்காவது நபராக லாரி கிளீனர் முருகன் என்பவர் மீட்கப்பட்டுள்ளார். நாங்குநேரி அருகே உள்ள ஆயர்குளத்தைச் சேர்ந்தவர் லாரி கிளீனர் முருகன். இவரும் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளார். இதனால் கல்குவாரி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. ராஜேந்திரன், செல்வகுமார் ஆகிய இரண்டு ஓட்டுநர்கள் மட்டும்தான் இன்னும் மீட்கப்பட வேண்டும். அந்த 2 பேரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாயும், தொழிலாளர் நலத்துறை சார்பில் 5 லட்சம் ரூபாயும் என மொத்தம் 15 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

nellai TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe