Advertisment

நெல்லை கல்குவாரி விபத்து... காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

 Nellai quarry accident ... relief notice for the injured!

Advertisment

நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் சுமார் 300 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிற நிலையில், இந்தச் சம்பவத்தில் சம்பந்தபட்ட கல்குவாரியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ளது சங்கர் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரி. இந்தக் கல்குவாரியில் நேற்று இரவு ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் கல்குவாரியில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் சிக்கிக் கொண்டனர். சுமார் 300 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட ஆறு தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மீட்புப்பணியைத்துரிதப்படுத்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் அரக்கோணத்திலிருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த விபத்தில் காயமடைந்து மீட்கப்பட்ட முருகன், விஜய்க்கு 1 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப்பணியைத்துரிதப்படுத்த அமைச்சர் ராஜகண்ணப்பன், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

nellai quarry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe