Advertisment

மறைந்த மோப்ப நாய் 'பிராவோ'! - 30 குண்டுகள் முழங்க நல்லடக்கம்!

காவல்துறையில் குற்றச் சம்பவங்கள் தொடர்பாகப் புலனாய்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புகளுக்கென்று காவலர்கள் உள்ளனர். இது தவிர்த்து மனிதனின் எண்ணத்திற்கு எட்டாத குற்றச் சம்பவங்களை நுண்ணிய மோப்ப சக்தியாலும், பேரழிவை ஏற்படுத்துகிற வெடிகுண்டுகளைக் கண்டுபிடிப்பதற்கும் மோப்ப நாய்களின் பிரிவுஇருக்கின்றன. கூர்மையான பயிற்சிக்குப் பின்னரே இந்த மோப்ப நாய்கள் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. குறிப்பாக தன் பாதுகாவலர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு மரியாதை தரும் சல்யூட் அடிக்கும் அளவுக்கு மோப்ப நாய்களுக்குப் பயிற்சியளித்திருப்பது திறமையின் உச்சம்.

Advertisment

இதில் தீவிரமாகச் செயல்பட்டது நெல்லை மாநகரின் வெடிகுண்டு தடுப்புப் பிரிவிலுள்ள 'பிராவோ' எனும் நாய். ஐந்தறிவுப் பிராணி என்றாலும் அதன் நுண்ணிய திறமை ஐந்தறிவையும் தாண்டியது. வெடிகுண்டு வழக்குகள் குற்றச் சம்பவங்களில் தன்னுடைய மோப்ப சக்தியால் பல குற்றச் சம்பவங்களின் புலனாய்வுக்குப் பெரிதும் உதவியிருக்கிறது பிராவோ என்கிறார்கள் அப்பகுதி காவல்துறையினர்.

Advertisment

அப்படிப்பட்ட மோப்பத் திறன் கொண்ட ஏழரை வயதுடைய பிராவோ நேற்றிரவு வயது மூப்பு காரணமாக மரணமடைந்தது. போலீஸில் பணியாற்றினாலும், அதுவும் சக உயிர்தானே; வாயில்லா ஜீவன் போன்று பார்க்கவில்லை. எங்களின் அங்கம் தான் பிராவோ. அதை எங்களின் தோழனாகவே பாவித்து வந்தோம். பிரித்துப் பார்க்கவில்லை எனக் கண்கள் கசியச் சொல்கிறார்கள், பிராவோவைப் பராமரிக்கிற வெடி குண்டுத் தடுப்புப் பிரிவு காவலர்கள்.

பிராவோ இறந்ததும் உரிய சடங்குகளுடன் பால் ஊற்றி அடக்கம் செய்தனர் காவலர்கள். பிராவோவின் நல்லடக்கம் முறைப்படி போலீஸ் மரியாதையோடு காவலர்களின் 30 குண்டுகள் முழங்க மாநகர போலீஸ் துணை ஆணையர்களான மகேஷ்குமார் மற்றும் சீனிவாசன், காவலர்கள் ஆகியர்களின் மலரஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. காவல் துறையினரின் இந்த மனித நேயம் காண்பவர்களின் கண்களை ஈரமாக்கின.

nellai police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe