ஐபிஎஸ் அதிகாரி தீபக் எம்.தாமர் நெல்லையின்புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நெல்லையில் காவல் ஆணையராக பணியாற்றிய பாஸ்கர் சென்னை ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Nellai Police Commissioner transferred to Chennai

Advertisment

அதேபோல் சென்னை குற்றப்பிரிவு எஸ்பி நிஷா பார்த்திபன் பெரம்பலூர் எஸ்பியாக பணிமாற்றம் செய்யப்படடுள்ளார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி திஷா மிட்டல் திருப்பூர் மாவட்ட எஸ்பியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த கயல்விழி உளுந்தூர்பேட்டை சிறப்பு காவல்படை கமாண்டென்ட்டாக நியமனம் செய்யப்பட்டுளளார்.

Advertisment

police

அதேபோல் சமூக நீதி மற்றும் மனிதஉரிமை ஏஐஜியாக இருந்த ரங்கராஜன் சென்னை குற்றப்பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதேபோல் நெல்லை முன்னாள் பெண்மேயர் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட டிஎஸ்பி அனில்குமார் மாற்றம் செய்யப்பட்டு புதியதாக டிஎஸ்பி பிராங்க்ளின் ரூபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை முன்னாள் பெண்மேயர் கொலை செய்யப்பட்டபோது நெல்லை காவல் ஆணையராக இருந்த பாஸ்கர் சென்னைக்கு மாற்றப்பட்ட நிலையில் இந்த கொலைவழக்கில் சிபிசிஐடி விசாரணை அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட்ட தக்கது.