நெல்லை மாவட்டத்திலுள்ள திசையின்விளையில் வீட்டைவிட்டு காதலுடன் சென்ற மகள் இறந்துவிட்டதாக கூறி பெற்ற தாயே போஸ்டர் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

anjali

Advertisment

Advertisment

நெல்லையில் திசையன்விளை பகுதியில் மன்னராஜா வடக்கு தெருவை சேர்ந்தவர் அமராவதி. இவரது கணவர் பன்னீர்செல்வம் இறந்துவிட்ட நிலையில் தனது மூன்று மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். மூத்த மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில், இரண்டாவது மகள் அபி கல்லூரியில் படித்து வருகிறார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் சந்தோஸை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அபியின் தாயார் அமராவதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அபி தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

தன் மகள் தன் பேச்சை கேட்காமல் வீட்டைவிட்டு வெளியேறியதால் ஆத்திரமடைந்த அமராவதி தனது மகள் அபி இறந்துவிட்டதாகக் கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.