Advertisment

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா!

Nellai Mayor Saravanan resigns

கோவை மேயராக பதவி வகித்து வந்த கல்பனா ஆனந்த குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் தனது ராஜினாமா கடிதத்தை தனது உதவியாளர் மூலம் வழங்கினார். மேயர் பதவியில் இருந்து கல்பனா ராஜினாமா செய்தது குறித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவிக்கையில், “உடல் நிலை மற்றும் குடும்பச் சூழ்நிலை போன்ற தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநகராட்சி ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சரவணன் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

Nellai Mayor Saravanan resigns

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது. இதில் 16 வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த சரவணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து நெல்லை மாநகராட்சி மேயராக கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சரவணன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதல், மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. மேலும் இது குறித்து திமுக தலைமைக்கும் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு மேயருக்கு எதிராகப் புகார் மனு அளித்திருந்தனர். அதே சமயம் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரி கவுன்சிலர்கள் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்திருந்தனர். இதையடுத்து மேயர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் கோவை, நெல்லை என அடுத்தடுத்து ஒரே நாளில் இரு மேயர்கள் ராஜினாமா செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே கோவை, நெல்லை மேயர்கள் மீதான புகார் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விசாரணை நடத்தி இருந்தார். இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி இரு மேயர்களும் ராஜினாமா செய்துள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.

mayor resigns Tirunelveli
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe