நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு... கைதின் ரகசிய பின்னணி!

நெல்லை மாஜி மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், வேலைக்காரப் பெண் மாரியம்மாள் ஆகிய மூவரும் கடந்த ஜூலை 23-ஆம் தேதியன்று படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலையில் நெல்லை மாவட்ட தி.மு.க. மகளிரணி பொறுப்பில் இருந்த சீனியம்மாளுக்கு தொடர்ப்பு இருப்பதாக அப்போது இருந்தே போலீசுக்கு சந்தேகம் இருந்தாலும், சீனியம்மாள் கைது செய்யப்படவில்லை. ஆனால் சீனியம்மாளின் மகன் கார்த்திக்கை கைது செய்தார் நெல்லை மாநகர டி.சி.யான சரவணன்.

incident

incident

அப்போது போலீசிடம் கார்த்திக் அளித்த வாக்குமூலத்தில், எம்.எல்.ஏ. சீட் வாங்கித்தருவதாக என் அம்மாவிடம் 30 லட்ச ரூபாய் வாங்கி, ஏமாற்றிவிட்டார் உமா மகேஸ்வரி. கொடுத்த பணத்தை பலமுறை உமாமகேஸ்வரியிடம் கேட்டுப் பார்த்தும் கொடுக்காததால்தான் கொலை செய்தேன்'’எனச் சொல்லியிருந்தார். மூன்று மாதங்கள் கடந்த நிலையில், இப்போது சீனியம்மாளும் அவரது கணவர் சன்னாசியும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். செங்கோட்டை அருகே உள்ள குண்டார்டேம் ஏரியாவில் காஸ்ட்லியான நிலத்தை விற்றதில் முருகசங்கரன், சீனியம்மாள், ஒரு புரோக்கர் ஆகியோருக்கு நல்ல கமிஷன் கிடைத்தது. இது போக சீனியம்மாள் பெயரில் சொத்து எதுவும் தனது கணவர் வாங்கியிருப்பாரோ என்ற சந்தேகம் உமாமகேஸ்வரிக்கு உண்டு. இதன் உள்விவகாரங்கள் கார்த்திக்கிற்கும் தெரியும். இதன் அடிப்படையில் விசாரித்தால் மேலும் பல வில்லங்கங்கள் வெளிவரும் என்கிறார்கள் நெல்லை அரசியல் வட்டாரங்கள்.

Action incident mayor nellai police
இதையும் படியுங்கள்
Subscribe