கூலிப்படையால் நர வேட்டை நடத்தப்பட்ட முன்னாள் நெல்லை மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன் பணிப் பெண் மாரியம்மாள் படுகொலை நடந்து மூன்று நாட்களாகியும் புலன் விசாரணை நீண்டு கொண்டே போகிறது. பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டிருக்கும் தனிப்படையினர் கிடைக்கும் ஒவ்வொரு க்ளூவையும் ஆராய்கின்றனர். காரணம் முன்விரோத பிரச்சனைகளைப் பற்றிய தகவலறிய காரணமானவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதால் புலனாய்வுச் சிக்கலும் ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DSC_5662.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
உமாமகேஸ்வரியின் உடன்பிறந்த சகோதரர் செல்லத்துரை கிராமத்தில் ஏற்கனவே வேறு விரோத காரணங்களால் கொல்லப்பட்டவர். மூளிகுளத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரி, தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர். சரவணன்என்கிற மகன், கார்த்திகா, பிரியா எனஇரண்டு மகள்கள். இதில் சரவணன் பைக் ஆக்ஸிடெண்ட்டில் மரணமடைந்தால் உமாமகேஸ்வரி, மற்றும் கணவரின் சொத்துக்களுக்கு ஆண் வாரிசு இல்லாமல் போயுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/005_3.jpg)
இந்தக் கண்ணோட்டத்தில் உமாமகேஸ்வரியின் அண்ணன் மகன் மூளிகுளம் பிரபுவைப் போலீசார் விசாரித்துள்ளனர். விசாரணையில் முன்னேற்றமில்லை சம்பவம் நடந்த வீடோ நகரின் ஒதுக்குப்புறத்தில் ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியிலிருப்பதால், அக்கம்பக்கம் கட்டுமானப் பணியிலிருக்கும் வீட்டின் நபரும் விசாரிக்கப்பட்டிருக்கிறார். ஏனெனில் உமாமகேஸ்வரியின் வீட்டிற்கு யாராவது சென்று வருவது பற்றிய தகவலறியும் வகையில் நடத்தப்பட்டதில் க்ளூ கிடைக்கவில்லை தனிப்படைக்கு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Z14_0.jpg)
மேலும் வீடு அமைந்த பகுதி தனிப்பகுதி என்பதால் அந்தப் பகுதிகளில் கூர்க்காக்கள் அமர்த்தப்பட்டு காவல் பணியிலிருந்திருக்கின்றனர். அவர்கள் மூலம் தகவல் கிடைக்கலாம் என்ற நோக்கில், அந்தப் பகுதியின் 10க்கும் மேற்பட்ட கூர்க்காக்களை தங்களின் வசம் கொண்டு வந்திருக்கிறது தனிப்படை. விசாரணையை காவல் நிலையங்களில் வைத்துக் கொண்டால் சிக்கல் ஏற்படலாம் என்பதற்காக மாநகரின் பாதுகாப்பான ஆயுதப்படையின் முகாமில் வைத்தே நடத்தப்பட்டு வருகிறது. இதுபற்றிய வேறு சில தகவலறியும் வகையில், உமாமகேஸ்வரியுடன் கட்சி மற்றும் பொறுப்புகள் தொடர்பாகப் பழகிய அவரது ஒத்த வயதுடைய பெண்களிடம் விசாரிக்கும் பொருட்டு, அப்போதைய மூத்த பெண் நிர்வாகி ஒருவர் சிகிச்சை காரணமாக அவர் மதுரை மருத்துமனை ஒன்றிலிருப்பதால் இன்ஸ்பெக்டர் பெரியசாமியின் தனிப்படையினர் அவரை விசாரிப்பதற்காக மதுரை சென்றுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Z13_2.jpg)
தவிர கணவர் முருக சங்கரன் பெருவழித்துறையின் உதவிக் கோட்டப் பொறியாளராகப் பணியாற்றியவர். அவர் பெருவழித்துறை தொடர்பான டெண்டர்களை தீர்மானிக்கும் பொறுப்பிலிருந்தவர் என்பதால் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு காண்ட்ராக்ட்கள் அனுமதித்தும் பினாமியாக் காண்ட்ராக்ட்களையும் மேற்கொண்டு ஆதாயமடைந்த வகையில் சொத்துக்கள் சேர்த்துள்ளார். அத்துடன் உமாமகேஸ்வரி மேயராக இருந்த நேரத்தில் பதவியின் மூலம் ஆதாயமடைந்தவர். இதுபோன்ற சொத்துகளுக்காக நடத்தப்பட்ட கொலையா என்றும் விசாரணை போகிறது.
கொலைச் சூழலைப்பார்க்கும் போது இப்பகுதியைச் சேர்ந்தவர்களல்லாத தொழில் முறையில் தேர்ந்த, வடநாட்டவர்களைக் கொண்டு நடத்தப்படடிருக்கலாம் என்பதை தனிப்படையினர் பேச்சிலிருந்து அறிய முடிகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)