Advertisment

நெல்லை கொலையில் முக்கிய குற்றவாளி கார்த்திகேயன்!உறுதி செய்தது காவல்துறை!

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் வேலைக்காரப் பெண் மாரியம்மாள் ஆகியோரின் கொடூரக்கொலையில் திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனுக்கு தொடர்பு இருப்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது. இதையடுத்து கார்த்திகேயனை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வுள்ளனர்.

Advertisment

k

கடந்த 23ம் தேதி உமா மகேஸ்வரி, அவரது கணவர், வேலைக்காரப்பெண் மூவரும் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவாரமாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

உமா மகேஸ்வரி வீட்டருகே உள்ள சிசிடிவி கேமராவில் வெள்ளை நிற ஸ்கார்பியோ கார் 2 முறை கடந்து சென்றுள்ளதும், அந்த காரில் இருந்து மதுரைக்கு 2 முறை செல்போனில் பேசியதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரில் சென்றது திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என உறுதி செய்யப்பட்டதும் அவரை கைது செய்து , அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.

Advertisment

திமுகவில் பெரிய சக்தியாக வளரவேண்டிய என் தாயார் சீனியம்மாள், உமா மகேஸ்வரியின் வருகையினால் செல்லாக்காசாகிவிட்டார். இதனால் சிறு வயது முதலே உமா மகேஸ்வரியை தீர்த்து கட்ட வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. அதனால் தனி ஆளாக வீடு புகுந்து 3 பேரையும் தீர்த்துக்கட்டினேன் என கார்த்திகேயன் வாக்குமூலம் அளித்தார். மேற்கொண்டு அவரிடம்நடத்தப்பட்ட விசாரணையில் நெல்லை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கார்த்திகேயன் தான் என்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து கார்த்திகேயனை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து கின்றனர்.

nellai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe