k;l

நெல்லை கண்ணன் அழுத்தமான, ஆழமான எதற்கும் அஞ்சாத சங்க நாதமாய், கலை, இலக்கியம், அரசியல், கலாச்சாரம் என்று பன்முகத் தன்மை கொண்ட பேச்சாளர். வெண்கலக் குரலாய் மாநிலம் முழுக்க ஒலித்த அந்த விற்பன்னர் நெல்லை கண்ணன் என்ற முத்திரை பெயரால் அழைக்கப்பட்டவர்.

Advertisment

உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 18-ஆம் தேதி அன்று நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பகல் 10.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 78. அவரின் மறைவுக்கு தமிழக முதல்வர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நெல்லையில் உள்ள அவரது சொந்த ஊரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

Advertisment