Nellai Kannan request to cm

Advertisment

பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ‘வாய்ஸ் மெசேஜ்’ வாயிலாக விடுத்துள்ள கோரிக்கையில் -

‘கோடைகால விடுமுறை, மழைக்காலம் என்றெல்லாம் வெள்ளையர் காலத்தில்தான் பிரித்தனர்.தங்களுக்கு வசதியான கோடை காலங்களில் விடுமுறைகளை வைத்துக்கொண்டு, மழைக் காலங்களில் பள்ளிக்கூடங்கள் திறந்தனர். அந்தக் கொடுமையை, அதற்குப் பின்னால் வந்த எந்த அரசும் மாற்ற முயலவில்லை. எல்லாவற்றிலும் நன்மையும் நேர்மையும் உண்மையும் ஒழுக்கமும் கொண்டு செயல்படுகிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நம் நாட்டு சிறுவர்களையும் குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காக, பள்ளிக்கூடங்களைக் கோடை காலத்தில் நடத்தி, மழைக் காலங்களில் நம் குழந்தைகள் சகதிகளிலும் சேறுகளிலும் நனைந்து வரும் கொடுமையைத் தடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.