குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருநெல்வேலி மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பேச்சாளர்நெல்லை கண்ணன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக, பாஜக கட்சியின் நிர்வாகிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

nellai kannan on court

Advertisment

இதனையடுத்து நெல்லை கண்ணன் நேற்று இரவு பெரம்பலூரில் கைது செய்யப்பட்டார். அவர்க்கு நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் அவர் நெல்லை குற்றவியல் நீதிமன்றத்தில் தற்போதுஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.