நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதில் எந்தவித உள்நோக்கமும் அரசுக்கு இல்லை என்று முதலவர் பழனிச்சாமி சட்டசபையில் தெரிவித்தார்.

Nellai-Kannan-arrested-issue-Chief-Minister-eps-explanation

Advertisment

Advertisment

மேலப்பாளையத்தில் நடந்த முஸ்லிம் அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இலக்கியச் பேச்சாளர் நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரையும் விமர்சித்த அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன.

இந்நிலையில், நெல்லை கண்ணன் கைது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் சட்டசபையில் இன்று (7/1/2020) கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிச்சாமி, "நெல்லை கண்ணன் விவகாரத்தில் சட்டரீதியாகவே நடவடிக்கை எடுத்துள்ளோம். எந்த கட்சி தலைவராக இருந்தாலும் அவர்களைப்பற்றி வரம்பு மீறி பேசக்கூடாது. நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் அரசுக்கு இல்லை" என்று தெரிவித்தார்.