Advertisment

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

nellai incident verdict

நெல்லை மாவட்டத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

நெல்லை மாவட்டம் ராமயன்பட்டியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த பள்ளிச் சிறுமியை அந்த பகுதியில் கொத்தனாராக பணியாற்றி வந்த விக்னேஷ் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்து கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு நெல்லை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கொத்தனார் விக்னேஷ் இயற்கையாக மரணிக்கும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நெல்லை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisment

nellai police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe