Skip to main content

நெல்லை முன்னாள் மேயர் படுகொலை சம்பவம்: சிபிசிஐடி ஐஜி நேரில் ஆய்வு 

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

 

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23-ந் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளை பிடிக்க நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.


 

இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி நெல்லையைச் சேர்ந்த தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை (வயது 33) கைது செய்தனர். இதற்கிடையே, இந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. 
 

இந்த வழக்கு ஆவணங்களை நெல்லை மாநகர போலீசார், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொலை சம்பவம் நடந்த இடத்தை சிபிசிஐடி ஐஜி சங்கர் நேரில் ஆய்வு செய்தார். 


 

சார்ந்த செய்திகள்