அதிகாரிகளின் அலட்சியம்... அணையின் மதகு உடைந்து வெள்ளப்பெருக்கு.

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த வடகரையில் அமைந்துள்ளது அடவி நயினார் நீர்த்தேக்கம். இதன் மொத்த கொள்ளளவு 132 அடியாகும். இந்த அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, கடந்த மாதம் 28ம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தினசரி பத்து கனஅடி வீதம் 90 நாட்களுக்கு திறக்கப்பட வேண்டும் என்பது அரசின் உத்தரவாக இருந்தது.

nellai tenkasi Dam clergy break down and flood officers careless

இந்நிலையில் அணையின் மேல்மட்ட கால்வாய்க்கு தண்ணீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட ஷட்டரில் ஏற்பட்ட பழுது காரணமாக மதகு வழியாக வினாடிக்கு சுமார் 50 கன அடி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் கால்வாய் வழியாக சீறிப்பாய்ந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை மூழ்கடித்துள்ளது. மேலும் அணைக்கு செல்லும் சாலையில் இரு இடங்களில் மிகப்பெரிய அளவில் உடைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அங்கு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு தற்காலிகமாக சாலை மூடப்பட்டுள்ளது.

இந்த அணைக்கட்டியது முதலே ஷட்டர்கள் முறையாக தரமான ஷட்டர்களாக பொருத்தப்படவில்லை. எனவே அடிக்கடி பழுது என்பது இப்பகுதி விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. தற்போது மேல்மட்ட தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கும் நிலையில், அணையின் தண்ணீர் முழுவதும் வெளியேறி வீணாகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

nellai tenkasi Dam clergy break down and flood officers careless

அணையில் தண்ணீர் இல்லாத காலத்தில் இதுபோன்ற பராமரிப்பு பணிகளை மேற்கொண்டால் இவ்வாறு தண்ணீர் வீணாகாது. அரசு இயந்திரத்தின் அலட்சியமே இதற்குக் காரணம் என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாகும். இந்நிலையில் இன்று காலை 09.00 மணியளவில் தான் அதிகாரிகள் வந்து இது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்போது விரைவில் பழுது சரி செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

dam issue Nellai District Tamilnadu Tenkasi
இதையும் படியுங்கள்
Subscribe