Advertisment

உடல் நலக் குறைவால் எம்.எல்.ஏ. மகன் காலமானார்!

nellai district palayankottai dmk mla son

Advertisment

பாளையங்கோட்டையின் தி.மு.க. எம்.எல்.ஏ., டி.பி.எம். மைதீன்கான். இவரின் மூத்த மகன் காஜாமைதீன் (54) மகள் நல்ல மீராள். டி.பி.எம். மைதீன்கான் குடும்பத்துடன் நெல்லையில் வசிக்கிறார். மகன் காஜா மைதீன் அவருடைய மனைவி மைதீன் பாத்திமா ஆகியோர் சென்னையில் மயிலாப்பூர் மந்தைவெளிப் பகுதியில் வசிக்கிறார். பல வருடங்களுக்கு முன்பே அங்கு குடியேறியவர். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்திலிருக்கிறார். குறிப்பாக வெளிநாடுகளுக்கு வற்றல் ஏற்றுமதி செய்துவந்தார்.

இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் டாக்டர். இரண்டாவது மகள் பி.காம் பட்டப்படிப்பு படிப்பவர். மூத்த மகளுக்கு வரும் மே 31- ஆம் தேதி அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையின் காஜாமைதீனுக்கு கடந்த 13- ஆம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் சென்னை வானரகம் பகுதியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டது. பலனின்றி நேற்றிரவு 12.30 மணியளவில் அவர் காலமானார். தகவலறிந்த எம்.எல்.ஏ டி.பி.எம்.மைதீன்கான் சென்னை விரைந்திருக்கிறார்.

incident son DMK MLA Palayankottai Nellai District
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe