Advertisment

கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி ஆணை!

nellai district kodumudiyaru reservoir opening cm palanisamy order

Advertisment

கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து சாகுபடிக்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயப் பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம் கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாங்குநேரி மற்றும் இராதாபுரம் வட்டங்களிலுள்ள வள்ளியூரான்கால், படலையார்கால் மற்றும் ஆத்துக்கால் ஆகியவற்றின் மூலம் பாசனம் பெறும் 2548.94 ஏக்கர் பாசன நிலங்களுக்கு கார் பருவ சாகுபடிக்காக 28.08.2020 முதல் 25.11.2020 வரை விநாடிக்கு 50 கன அடி மிகாமல் தண்ணீர் திறந்து விடவும், அணைக்கு கூடுதல் நீர்வரத்து இருக்கும் பட்சத்தில், முன்னுரிமை அளிக்கப்பட்ட 2,548.94 ஏக்கர் நிலங்களின் குறைந்தபட்ச தேவைக்கு கூடுதலாக உள்ள நீரினை, வடமலையான்கால் மூலம் பாசனம் பெறும் 3,231.97 ஏக்கர் நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 100 கன அடி வீதம், நீர் வரத்து மற்றும் இருப்பைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்துவிடவும் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி மற்றும் இராதாபுரம் வட்டங்களில் உள்ள 5,780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

kodumudiyaru Nellai District water
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe