நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது. இந்த மாவட்டத்தில் களக்காடு, திருக்குறுங்குடி, தலையணை, செங்கல்தெரி உள்பட 21 இடங்களில் புலிகள் கணக்கெடுப்பு நடக்கிறது.
கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ளும் 21 குழுவினர் புலிகளின் கால்தடங்கள் மற்றும் எச்சங்களைக் கொண்டு ஜனவரி 26- ஆம் தேதி வரை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.