நெல்லை பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் குடல் இறக்க சிகிக்சைக்காக அனுமதிக்கபட்டிருந்த 11 மாத குழந்தை விஸ்வா தவறான சிகிச்சையால் பலியானதாக. மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
பாளையங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு (33) அவருடைய மனைவி அம்பிகா இவர்களுடைய மகன் 11 மாத ஆண் குழந்தையான விஷ்வா. இந்த குழந்தைக்கு குடல் இறக்கம் அறுவை கிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனை அருகே தனியார் மருத்துவமனையில் நேற்று காலை அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகு மாலையில் அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனை கேட்டு குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர்.
இதனை அறிந்த பாபுவின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து தனியார் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். தவறான சிகிச்சையால் தான் குழந்தை இறந்ததாக கூறி மருத்துவமனையில் முற்றுகையிட்டனர்.
இது குறித்து குழந்தையின் தாய் கதறி அழுதபடியே, ’’ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து இன்னைக்கு வரைக்கும் அங்கதான் காட்டிகிட்டு இருந்தோம். என் குழந்தைக்கு இந்த ஆபரேஷன் செஞ்சா ஒத்துக்கிடுமா? இல்லேன்னா கொஞ்ச நாள் கழித்து செஞ்சுக்கலாமா? என்று நான் கேட்டேன். அப்போ அவர் சொன்னாரு... திரும்பத் திரும்ப கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தேன். இன்னைக்கு காலையில என் குழந்தையை செக் பண்ண வந்தாரு. அப்பவும் அவர்கிட்ட கேட்டேன். பத்து மாசம் தான ஆகுது. இவனுக்கு இந்த ஆபரேஷன் செஞ்சா ஒத்துக்கிடுமான்னு கேட்டேன். அப்போ அவர் என்னைய பார்த்து சத்தம் போட்டார். என் கணவரையும் திட்டினார். நீ கேள்வி கேட்டா இந்த மருத்துவமனைக்கு வராத. நான் சொல்றதத்தான் நீ கேக்கணும்னு சொன்னார்.
இப்போ நாங்க கேட்டதுக்கு மயக்க மருந்து கொடுத்து குழந்தை இறந்துடுச்சுன்னு சொல்றாங்க’’ என்று கூறினார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });