Advertisment

ஆடுகள் வெட்டிச் சாய்ப்பு; முதியவர் தற்கொலை முயற்சி

s

நெல்லை மாவட்டத்தின் சேர்ந்தமரம் அருகில் உள்ள நொச்சிகுளம் கிராமத்தின் மகாலிங்கம் மனைவி அந்தோணியம்மாள் தன் வீட்டின் பின்புறம் தொழுவம் அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார்.

Advertisment

நேற்று முன்தினம் இரவு ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு தொழுவத்திற்கு வந்து பார்த்திருக்கிறார். அங்கே ஐந்து ஆடுகள் வெட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்திருக்கிறார். அவைகளின் மதிப்பு லட்சத்திற்கும் மேல் என்று கணக்கிடப்படுகிறது.

Advertisment

இது தொடர்பாக சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் புகார் செய்த அந்தோணியம்மாள் அதே பகுதியைச் சேர்ந்த மாடசாமி (70) அவர் மனைவி வெள்ளத்தாய் (60) மகள் சண்முகத்தாய் ஆகிய 3 பேரையும் காரணமானவர்கள் என்று புகாரில் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து எஸ்.ஐ. குருசாமி விசாரணை நடத்தியிருக்கிறார். பழைய பகை காரணமாக தன் மீது போலீசில் புகார் கூறப்பட்டதை தாங்கமுடியாமல் மன உளைச்சலால் தவித்த முதியவர் மாடசாமி, நேற்று, தன் வீட்டின் மாடியில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவரை மீட்டு பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாடசாமி மீது தற்கொலை வழக்கு பதிவு செய்த சேர்ந்தமரம் எஸ.ஐ வாசுதேவன் விசாரணை நடத்தி வருகிறார்.

sernthamaram nellai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe