Advertisment

பட்டப்பகலில் படுகொலை; பதறவைக்கும் சிசிடிவி காட்சி

Nella massacre incident; The disturbing CCTV footage

Advertisment

நெல்லையில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் அந்தக் கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் ராஜா. 35 வயதான தீபக் ராஜா மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று இரண்டு மணி நேரத்திற்கு முன்பு நண்பருடன் சேர்ந்து கேடிசி நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். சாப்பிட்ட பின்னர் வாகனத்தை எடுப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது மறைந்திருந்து 6 பேர் கொண்ட கும்பல் தீபக் ராஜாவை சரமாரியாக பட்டப்பகலிலேயே வெட்டி படுகொலை செய்தனர். கொலையில் ஈடுபட்ட அனைவரும் முகத்தை மறைத்தபடி துணியைக் கட்டி இருந்தனர்.

இதில் சம்பவ இடத்திலேயே தீபக் ராஜா துடிதுடித்து உயிரிழந்தார். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பாளையங்கோட்டை காவல் துறையினர் தீபக் ராஜாவின் உடலைக் கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்பொழுது கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சி ஒன்றில் ஆறு பேர் கொண்ட கும்பல் தீபக் ராஜாவை கொடூரமாக வெட்டி கொலை செய்யும் அந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe