Nel Jayaraman 444

Advertisment

புற்று நோயால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் கிசிச்சைப் பெற்று வரும் பிரபல நெல் ஆராய்ச்சியாளர் நெல். ஜெயராமன் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலரும், எம்.எல்.ஏ. மு.தமிமுன் அன்சாரி சந்தித்து நலம் விசாரித்தார்.

அவருடன் பொருளாளர் ஹாரூன் ரஷீது, துணைப்பொதுச்செயலர் ராவுத்தர்ஷா, மாநில துணைச்செயலர் ஷமீம் அஹ்மது, மாணவர் இந்தியாவின் பொருளாளர் பஷீர் ஆகியோரும் வருகை தந்தனர்.

அப்போது உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அங்கு வந்து நெல் ஜெயராமனை நலம் விசாரித்தார்.

Advertisment

அப்போது தமிமுன் அன்சாரி, அமைச்சரிடம் அவரது சேவைகளை எடுத்துக் கூறி, 174 பாராம்பரிய நெல் விதைகளை மீட்டவர் என்றும், அவரது நெல் திருவிழா நிகழ்ச்சிகள் மூலம் அவற்றை சந்தைப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.

Nel Jayaraman

எனவே இதை முதல்வரிடம் கூறி இவருக்கு வேண்டியதை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

அதற்கு அமைச்சர், நாம் இருவரும் உடனே முதல்வரை சந்திப்போம், அவரிடம் சிகிச்சை விவரங்களை எடுத்துச் சொல்லுவோம் என்றதும், இருவரும் முதல்வரை சந்திக்க புறப்பட்டு சென்று, அவரது கீரின்வேஸ் இல்ல சாலையில் சந்தித்தனர்.

விபரங்களை கேட்ட முதல்வர் அவர்கள், அதற்கான சட்ட வரையறைககளை பார்த்து விட்டு ஆவணம் செய்வதாக கூறினார்.