Advertisment

அரசு மருத்துவமனையில் அலட்சியம்; கொலுசுடன் தையல் போட்டது அம்பலம்

Negligence in Government Hospital; Ambalam stitched with Colus

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் ராதிகா என்பவர் கடந்த 28ம் தேதி அவரது இரு சக்கர வாகனத்தில் செல்லும் போதுவிபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயம் அடைந்த ராதிகா பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisment

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கண்களின் கீழும்மற்றும் காலிலும்ஏற்பட்ட பலத்த காயத்தால் இரு பகுதிகளிலும் தையல் போட வேண்டிய நிலை ஏற்பட்டது.பாபநாசம் அரசு மருத்துவமனையில் அந்த இரு பகுதிகளிலும் தையல் போடப்பட்டது.

Advertisment

இருந்தபோதும், ராதிகா மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவருக்கு காயம் ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து வலி இருந்தது. இதன் காரணமாக எக்ஸ்-ரே எடுக்கப்பட்டது. அதில் காலில் தையல் போடப்பட்டபகுதியில் கொலுசின் ஒரு பகுதி (கொலுசின் மணி) இருந்துள்ளது.

கும்பகோணம் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் ராதிகாவிற்கு அறுவை சிகிச்சை செய்து கொலுசின் பகுதியை அகற்றியுள்ளனர்.

hospital Tanjore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe