ிு

சென்னை கலைவாணர் அரங்கில் ஜனவரி 5ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவைசிறப்பு கூட்டத்தொடர் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒமிக்ரான் பரவல் காரணமாக மீண்டும் கூடுதல்கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி உறுப்பினர்கள் அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கலைவாணர் அரங்கில் அனுமதிக்கப்படுவார்கள் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

நாளை மறுநாள் தொடங்கும் இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்ற உள்ளார். ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் கூட்டத்தொடரில் எப்போதும் ஆளுநர் சிறப்புரை ஆற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சென்னையில் உள்ள ஜார்ஜ் கோட்டையில் கூட்டத்தொடர் நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு எடுத்துவந்த நிலையில், எதிர்பாராத விதமாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த முறையும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.