Neet Team Cheat-CV Shanmugam Review!

Advertisment

நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவுக்கு எதிராக பாஜக பிரமுகர் கரு. நாகராஜன்சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு நீட் தேர்வுக்கு அமைத்துள்ள நீதிபதி தலைமையிலான குழு குறித்து முன்னாள் நிதி அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார். “நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய அரசு குழு அமைத்துள்ளது ஏமாற்றுவேலை. 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவியாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.