மதுரை தல்லாகுளத்தில்ஜோதி துர்காஎன்ற மாணவி கடந்த வருடம் நீட் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் எடுத்த நிலையில், நாளை நடைபெறும் நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில்மாணவி ஜோதி துர்காதற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்திற்கு முன்பாகவே, அரியலூரில் நீட்டுக்குதயாராகி வந்தவிக்னேஷ் என்ற மாணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் தர்மபுரியில் மேலும் ஒரு மாணவர் நீட் தேர்வு பயத்தில்தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளைநீட் தேர்வு எழுதஇருந்ததர்மபுரியைச் சேர்ந்த மாணவர் ஆதித்யா என்பவர் வீட்டில்தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தேர்வு, மாணவர்களை மருத்துவர்களாக மாற்றுவதற்குபதிலாக பல உயிர்களைக் குடித்துக் கொண்டிருக்கிறது. விடிந்தால் நீட் தேர்வு என்ற நிலையில் 3 மாணவர்கள் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். தன் குழந்தை டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவோடு இருக்கும் இந்த நேரத்தில்தான் அடுத்தடுத்த இறப்புகள் பெற்றோர்களையும் சிந்திக்க வைத்துள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை நகரில் வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நீட் வேண்டாம் என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.