NEET issue ariyalur dmk people condolance

நீட் தேர்வுக்கு தயாராகிவந்த அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை சேர்ந்த வி.விக்னேஷ் மரணமடைந்ததை தொடர்ந்து, தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் செந்துறையில் மௌன ஊர்வலம் நடைபெற்றது. போராட்டத்தின் முடிவில், மத்திய, மாநில அரசுகள் கொண்டுவந்த மாணவர்களை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், நீட் தேர்வால் மரணமடைந்த எலந்தங்குழி வி.விக்னேஷ் குடும்பத்திற்கு நட்ட ஈடு வழங்கக்கோரியும் முழக்கங்களை எழுப்பினார்கள்.

Advertisment

இன்று காலை 10 மணிக்கு செந்துறை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மு. ஞானமூர்த்தி தலைமையில் செந்துறையில் அம்பேத்கர் சிலையில் இருந்து புறப்பட்டு பெரியார் சிலை முன்னே நிறைவு செய்தனர். இதில் அனைத்து அரசியல் இயக்கத்தை சார்ந்தவர்களும், இட ஒதுக்கீட்டு போராளிகளும், நீட் எதிர்ப்பு உணர்வாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். தந்தை பெரியார் சிலை முன்பாக வி. விக்னேஷ் திருஉருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

Advertisment